அம்பாசமுத்திரத்தில் சீமானுக்கு திமுக ஆதரவா; ஸ்டாலின் பதில்

நமது நிருபர்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119வது ஜெயந்தி மற்றும் 64வது குருபூஜையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் அவரது திருவுருவச் சிலைக்கு மலர்தூவியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்.

பிறகு அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது ‘அம்பாசமுத்திரத்தில் போட்டியிடும் நாதக தலைவர் சீமானுக்கு ஆதரவு அளிப்பீர்களா’ என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, ‘தேர்தல் தேதி அறிவித்த பிறகு அது பற்றி கூறுகிறோம்’ என்று ஸ்டாலின் பதில் அளித்துவிட்டு புறப்பட்டு சென்றார்.

Source link