“அம்மா அம்மா.. கோடநாடுல போய் நின்னாருல்ல..விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்

சென்னை,

2026 சட்டசபை தேர்தலில் சத்யராஜ், திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சட்டமன்றத் தேர்தலில் திமுக 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் இன்று தொடங்கி உள்ளார் சத்யராஜ்.

அந்தவகையில் இன்று சென்னை பெரம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார் சத்யராஜ். பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிடும் நிலையில், அங்கு அவரை கடுமையாக விமர்சித்துப் பிரசாரம் செய்துள்ளார் சத்யராஜ்.

பெரம்பூரில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகருக்கு ஆதரவாக சத்யராஜ் பிரசாரம் மேற்கொண்டபோது கூறியதாவது:-

தனது கொள்கைத் தலைவராக அம்பேத்கர், பெரியார் என சொன்னபோது, விஜய் அரசியலுக்கு வந்தது பற்றி ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இளைஞர்களிடம் இந்த மாபெரும் புத்தகங்களை தம்பி கொண்டு போய் சேர்த்தார். என்று எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. நாம் நினைத்தது போல இல்லை அவர் அரசியலுக்கு வந்தது சரிதான் என்று ரொம்ப சந்தோசம். பேச பேச என்னாச்சினா கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் நம்ம தமிழ் நாடு முதல் அமைச்சரை முதலில் ஸ்டாலின் சார் என்றார் அடுத்தது ஸ்டாலின் அங்கிள் அப்படின்னு சொல்லிவிட்டார்.

எனக்கு பகீர் என்று ஆகிவிட்டது என்னடா எல்லோரையும் மரியாதையுடன் பேசுபவர் நம்ம பார்த்த விஜய் இப்படி இல்லையே நாம் பார்த்த விஜய் வேற மாதிரிதான் அவர் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பாடுபட கூடிய ஒரு நல்ல நடிகர் ஆச்சே அவர் வந்து கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் தமிழ் நாட்டின் முதல் அமைச்சரை போய் ஸ்டாலின் அங்கிள் என்று சொல்லிவிட்டாரே.

இதற்கு முன்னாடி கொடநாடு போய் தலைவா பட பிரச்சனையின் போது அம்மா அம்மா.. என்னை மன்னிச்சிருங்க அம்மா எப்படியாவது தலைவா படத்தை ரீலிஸ் பண்ணுங்க என்று கெஞ்சி பேசினார் அல்லவா அது மாதிரிதான் மரியாதையாக பேசுவர் என்று நினைத்தேன் ஆனால் ஸ்டாலின் அங்கிள் என்று சொன்ன உடனே இப்படி இறங்கி பேச மாட்டாரு தம்பி சூட்டிங்கில் எல்லாருக்கும் மரியாதை கொடுத்து பேசுவார். ஸ்டாலினை அங்கிள்னு சொன்ன மாறி ஜெயலலிதாவை சொல்லுவீங்களா? ‘நான் ரெடிதான் வரவா’லாம் இல்ல, தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா போட்டுருப்பாங்க.

சின்ன சம்பளம் வாங்குற என்னையே மக்கள் ஈசியா சந்திச்சு பிரச்சனையை கேட்க முடியாது. அவ்ளோ பெரிய சம்பளம் வாங்குறவரை எங்கே போய் பார்ப்பீங்க?”

இவ்வாறு அவர் கூறினார்.

Source link