”அரசுப் பணியில் திருநங்கைகளுக்கு வாய்ப்பு?”; விரைவில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியப் பணியிடங்களுக்கான காலிப்பணியிடங்களை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எனத் தனித்தனியாக அறிவிப்பதற்கான காரணங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

டெல்லியில், ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகின. அதில், ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டியிடும் வகையில் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆனால், திருநங்கைகள் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இது பேசுபொருளாக மாறிய நிலையில், இந்த அறிவிப்பை எதிர்த்து ஜேன் கவுஷிக் மற்​றும் பிரவீன் சிங் ஆகியோர் உச்ச நீதி​மன்​றத்​தில் மனுத் தாக்​கல் செய்​தனர்.  

இந்த மனுக்​கள் நீதிப​தி​கள் ஜெ.பி. பர்​திவாலா மற்​றும் நீதிபதி கே. வினோத் சந்​திரன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. விசாரணை நடைபெற்ற நிலையில், இந்த வழக்கில் நீதிப​தி​கள் உத்தரவு பிறப்​பித்தனர். அதில், ”அரசுப் பணி நியமனங்​களுக்​கான ஆட்​சேர்ப்பு அறி​விப்பு ஏன் ஆண் மற்றும் பெண் பிரி​வினருக்​கானதாக இருக்கிறது? பாலின அடிப்​படை​யில் காலிப்​பணி​யிடங்​களை அறி​விப்​ப​தற்​கான சட்​டப்​பூர்வ அடிப்​படை காரணங்கள் என்ன? 

பொது ஆட்​சேர்ப்​பில் காலிப் பணி​யிடங்​களை அறி​விக்க, பாலினத்தை அடிப்​படை​யாகப் பயன்​படுத்​து​வது ஏன்? அரசுப் பணியில் திருநங்​கைகளுக்கு எவ்​வாறு இடமளிக்​கப்​படும்? இந்த கேள்​வி​களுக்​கான பதிலை டெல்லி அரசு விரிவாக தாக்​கல் செய்ய வேண்​டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.