இதேபோன்று, வாக்குச்சாவடிக்கு வர இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகளும் சுமார் 1.90 லட்சம் பேர் தபால் வாக்கு செலுத்த விண்ணப்பித் திருந்த நிலையில், அவர்களின் வீடுகளுக்கே சென்று, வாக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும், தேர்தல் பணியில் ஈடு படும் போலீஸார் மற்றும் நுண் பார்வையாளர்களும் தபால் வாக்கு செலுத்தி வருகின்றனர்.
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 3-ம் கட்ட பயிற்சி தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. பல்லாவரத்தில் நடந்த பயிற்சிக்கு வந்தவர்கள் தபால் வாக்கு செலுத்த கேட்டு அவர்களுக்கு அந்தந்த பயிற்சி வகுப்பு அறையில் வழங்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் அங்கு வழங்கப்படாமல். எந்த அறிவிப்பும் இல்லாமல் பள்ளியின் முன்புறத்தில் 2 அறைகளில் தபால் வாக்கு செலுத்த ஒதுக்கப்பட்டது.
