நமது நிருபர்
நீலகிரி மாவட்டத்தில் இரவில் பெய்த கனமழையால், குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் 11 இடங்கள், கோத்தகிரி சாலையில் 4 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, மரங்கள் விழுந்தன. ஊட்டி மேட்டுப்பாளையம் சாலையில் மண் சரிவில் அரசு பஸ் சிக்கியது.
பர்லியார் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மீட்புக்குழுவினர், போலீசார் மண்ணில் புதைந்த அரசு பஸ்யை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். காயமடைந்த கண்டக்டர் மீட்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 6 பேர் உயிரிழந்ததாக அச்சம் ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடக்கிறது.
மீட்பு பணிகள் தீவிரமாக நடக்கும் நிலையில், அமைச்சர்கள் கமலி, சம்பத் குமார் நேரில் பார்வையிட்டனர்.


