சென்னை: அர்னாப் புயல் காரணமாக சென்னை – விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமுந்திரி புறப்பாடு, வருகைக்கான 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
வங்கக்கடலில் உருவான ‘அர்னாப்’ புயல் நேற்று காலை ஆந்திராவில் கரையைக் கடந்தது.
இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமுந்திரிக்கு செல்லும் 6 விமானங்கள், மறுமார்க்கத்தில் அங்கிருந்து சென்னை வரும் 6 விமானங்கள் என மொத்தம் 12 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்தாகின. இதனால், பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.
