அர்னாப் புயல் இன்று உருவாகிறது; எங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை

– நமது நிருபர்-

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது; மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. மணிக்கு 8 கி.மீ., வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வந்தது. தற்போது மணிக்கு 15 கி.மீ வேகமாக நகர்ந்து வருகிறது.

இதன் நகர்வு வேகம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆந்திராவின் விசாகப்பட்டினத்துக்கு கிழக்கு தென்கிழக்கே 780 கி.மீ. தொலைவில் நிலவுகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, ‘அர்னாப்’ புயலாக இன்று (அக்டோபர் 26) மாறலாம். நாளை தீவிர புயலாக மாறி, ஆந்திரா, ஒடிஷா இடையே கரையை கடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

விடுமுறை விவரம்!

* கோவை

* திண்டுக்கல்

* ராமநாதபுரம்

ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 26) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

* நீலகிரியில், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா வட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்னாப் புயல் இன்று உருவாகிறது; எங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை

– நமது நிருபர்-

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது; மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. மணிக்கு 8 கி.மீ., வேகத்தில் நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம் 5 கி.மீ.,யாக குறைந்தது.

இதன் நகர்வு வேகம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, ‘அர்னாப்’ புயலாக இன்று (அக்டோபர் 26) மாறலாம். நாளை தீவிர புயலாக மாறி, ஆந்திரா, ஒடிஷா இடையே கரையை கடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

விடுமுறை விவரம்!

* கோவை

* திண்டுக்கல்

* ராமநாதபுரம்

ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 26) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

* நீலகிரியில், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா வட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் தியாகதுருகம் வட்டாரத்தில் உள்ளசில பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

* ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பொரசக்குறிச்சி

* ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி விருகாவூர்

அரசு மேல்நிலைப்பள்ளி, விருகாவூர்

* அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி விருகாவூர்.

சின்னசேலம் வட்டாரம்

* ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஈரியூர்

* தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

* புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

16 மாவட்டங்களில்…

புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (அக்டோபர் 26) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அந்த மாவட்டங்களுக்கு, ‘ஆரஞ்ச் அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Source link