புதுடில்லி: வங்கக்கடலில் உருவான அதி தீவிரமான அர்னாப் புயல் ஆந்திராவின் நரசாபுரம் அருகே கரையைக் கடந்தது. இந்தப் புயலின் தாக்கத்தால் ஆந்திராவின் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. புதுச்சேரி, ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலங்களிலும் புயல் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
புயல் பாதிப்பு குறித்து ஆந்திரா உள்பட 4 மாநில முதல்வர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.
அவர் வெளியிட்ட பதிவில்; ஆந்திரா, புதுச்சேரி, ஒடிசா, சத்தீஸ்கர் மாநில முதல்வர்களுடன் அர்னாப் புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தேன். அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதி அளித்துள்ளேன். தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படைகள் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து, மதிப்பீடு செய்ய மத்திய குழுக்கள் விரைவில் அனுப்பி வைக்கப்படும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
