முதல்வர் விஜய் ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் விஜய் மேற்க்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து டூர் அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தமிழக அரசியலில் நீட் தேர்வு முறைகேடு மற்றும் பழனி நில மோசடி, குதிரை பேரம் வழக்கு உள்ளிட்ட பிரச்சனைகள் மூலம் அடுத்தடுத்த நகர்வுகள் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் மூன்று நாள் பயணத் திட்டம் பெரும் எதிர்பார்ப்பையும் அரசியல் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காவிரி நீர் விவகாரம், டெல்லி பயணம் மற்றும் சட்டப்பேரவைக் கூட்டம் என அடுத்தடுத்து முக்கிய நிகழ்வுகளில் அவர் பங்கேற்க உள்ளார்.
கர்நாடக முதலமைச்சருடன் காவிரி நீர் பேச்சுவார்த்தை!
ஆகஸ்ட் 3-ஆம் தேதி, தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் டி.கே சிவகுமாரை சந்தித்துப் பேசவுள்ளார் முதலமைச்சர் விஜய். மேகதாட்டு அணை விவகாரம் மற்றும் தமிழகத்திற்குரிய காவிரி நீரைத் தங்குதடையின்றி திறப்பது குறித்து இந்த சந்திப்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் இந்த பேச்சுவார்த்தை அமையும் என்பதால் அரசியல் வட்டாரத்தில் இதன் மீது அதிக கவனம் திரும்பியுள்ளது.
டெல்லியில் வைகோ நூல் வெளியீட்டு விழா!
அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 4-ஆம் தேதி டெல்லி செல்லும் முதலமைச்சர் விஜய், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எழுதிய புதிய நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். தேசிய தலைவர்கள் பலர் கலந்துகொள்ளும் இந்த விழாவில் முதலமைச்சர் விஜயின் பங்கேற்பு, தேசிய அளவிலான அரசியல் களத்தில் உற்றுநோக்கப்பட உள்ளது. டெல்லி பயணத்தின் போது பிற முக்கிய அரசியல் தலைவர்களையும் அவர் சந்திக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 5: சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்
டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பும் முதலமைச்சர் விஜய், ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்கிறார். முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் முதல் கூட்டத்தொடர் என்பதால் அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தவெக தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ள மகளிருக்கு ரூ. 2500 திட்டம், 500 ரேசன் கார்டுகளுக்கு ஒரு ரேசன் கடை, அரிசி தவிர மற்ற அனைத்து பொருட்களும் பாக்கெட் செய்து விற்பனை செய்யப்படும், நெல் கொள்முதல், மூட்டைகள் ஏற்றி, இறக்க லஞ்சம் பெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் , பயிர் கடன் முழுவதும் தள்ளுப்பட் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகுமா என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது, மேலும் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளிப்பது மற்றும் மாநிலத்தின் முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவது என பேரவையில் அதிரடி காட்டத் தயாராகி வருகிறார்.
விறுவிறுப்பாக மாறும் அரசியல் களம்
நீட் தேர்வு முறைகேடு போராட்டம், எல் நிலோ காலநிலை மாற்றம், தென்மேற்கு பருவமழை குறைவு, தவெக அரசு மீது குதிரை பேர குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை தமிழகத்தில் முக்கிய பிரச்சனைகளாக உள்ளது. மேலும் காவிரி விவகாரத்தில் மாநில உரிமையைப் பேசுவது, டெல்லியில் தோழமைக் கட்சித் தலைவரின் விழாவில் பங்கேற்பது, பேரவையில் மக்கள் பிரச்சினைகளை விவாதிப்பது என ஆகஸ்ட் 3 முதல் 5 வரையிலான மூன்று நாட்கள் முதலமைச்சர் விஜயின் அரசியல் களம் மிகவும் சுறுசுறுப்பாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கப்போகிறது.
