முதலமைச்சர் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்து பரப்பிய லேத் பட்டறை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மையான இடங்களை பிடித்து ஆட்சி அமைத்தது முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வருகிறது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் முதலமைச்சருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் நபர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சர் விஜய் குறித்து எக்ஸ் வலைதளத்தில் அவதூறாக கருத்து பதிவிட்ட நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த லேத் பட்டறை உரிமையாளர் தியாகு என்பவரை நான்கு பிரிவுகளின் கீழ் ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
