புதுடில்லி: ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 3 முறை ஈட்டி எறிதலில் தங்கம் வென்றவர் நீரஜ் யாதவ், வயது 42. உத்தரபிரதேசத்தை இவர் இந்தியாவின் திறமையான மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதனை தேசிய பாரா தடகள அணியின் தலைமைப் பயிற்சியாளர் எஸ். சத்யநாராயணா உறுதிப்படுத்தினார்.
அவர் கூறியதாவது: நீரஜ் யாதவ் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது மிகவும் துரதிர்ஷ்டவசமான, சோகமான நிகழ்வாகும். இந்த விபரீத முடிவுக்குப் பின்னணியில் உள்ள காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை,” என்றார்.
