ஆசிய பாரா போட்டிகள்: தமிழக வீராங்கனை பேபி சஹானா டேபிள் டென்னிஸில் வெண்கலம் வென்று சாதனை

Summary

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் அயிச்சி நகோயா நகரில் நேற்று முன் தினம் தொடங்கின. வரும் 24ஆம் தேதி வரை பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.

பதக்கம்

இந்நிலையில் இன்று பாரா போட்டிகளில் மகளிருக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையர் கிளாஸ் 9 பிரிவு அரையிறுதி போட்டி நடைபெற்றது. இதில் தமிழக வீராங்கனை பேபி சஹானா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

அரையிறுதிப் போட்டியில், ஐந்து முறை பாராலிம்பிக் தங்கம் வென்ற சீன நட்சத்திர வீராங்கனை மாவோ ஜிங்டியானை எதிர்த்து சஹானா கடுமையாக போராடினார்.

இறுதியில் 8-11, 2-11, 4-11 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவிய போதிலும், அரையிறுதி வரை முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கான வெண்கலப் பதக்கத்தை அவர் உறுதி செய்தார்.

சாதனை

இதன்மூலம் இந்திய பாரா டேபிள் டென்னிஸ் வரலாற்றில், நின்றுகொண்டு விளையாடும் தடகளப் பிரிவில் முதன்முறையாக பதக்கம் வென்றவர் என்ற சாதனையை பேபி சஹானா படைத்துள்ளார்.

அவருக்கு பல தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Source link