ஆசிய பாரா விளையாட்டு 2026: ஜப்பானில் இந்திய வீரர்களின் பதக்க வேட்டை – 34 பதக்கங்களுடன் சாதனை!

1.பாரா டேபிள் டென்னிஸ் – 5 வெண்கலம்

மகளிர் ஒற்றையர் பல்வேறு பிரிவுகளில் விளையாடிய இந்திய அணி வீராங்கனைகள் பாவினா படேல் , சோனல்பேன் படேல் , பிராச்சி பாண்டே, சஹானா ரவி ஆகியோர் அரையிறுதிப் போட்டி வரை முன்னேறி வெண்கலம் வென்றுள்ளனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜெஹான் மதன் வெண்கலப் பதக்கத்தை வென்றார். அரையிறுதிகளில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர்கள் தங்கள் போட்டிகளில் பின்தங்கியதால் வெண்கலப் பதக்கங்களுடன் திரும்பினார்.

2 .பாரா தடகளம் – 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம்

i.ஈட்டி எறிதல் F53/F54 பிரிவில் பிரதிப் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார் , F53 ஈட்டி எறிதல் பிரிவில் ஆயுஷ் வர்மா வெண்கலப் பதக்கம் வென்றார்.

ii. 400 மீ ஓட்டப்பந்தயத்தில் தீப்தி ஜீவன்ஜி தங்கப் பதக்கம் வென்றார்.

iii. ஆடவர் வட்டி எரிதல் பிரிவுகளில் பிரணவ் சூர்மா தங்கம் வென்றார் , ராம் ரத்தன் சிங் வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.

iv. 200 மீ ஓட்டப்பந்தயத்தில் பிரீத்தி பால் வெள்ளி பதக்கம் வென்றார். T 12 ஓட்டப் பந்தயத்தில் சிம்ரன் தங்கம் வென்றார். தேஜல்பன் டாமோர் வெண்கலம் வென்றன.

v. ஆண்களுக்கான F11 குண்டு எறிதல் போட்டியில் பிரவீன் ஷர்மா வெண்கலம் வென்றார்.

Source link