மாணவர்களின் தொடர் போராட்டம் வென்றுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, கல்வி முறையில் முறைகேடு உள்ளிட்ட குளறுபடிகளுக்காக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற முதன்மை கோரிக்கையுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ச்சியாக போராடி வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர், மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு வெற்றி கிடைத்துள்ளது. போராட்டத்தின் எதிரொலியாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்த வெற்றியை நாடெங்கும் உள்ள கரப்பான் பூட்சி கட்சியை சேர்ந்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், இளைஞர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் போராட்டத்தில் நேரில் கலந்து கொண்ட பிரகாஷ் ராஜும் தனது எக்ஸ் பக்கம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வாழ்த்துக்கள் என் அன்பிற்குரிய ‘கரப்பான் பூச்சிகளே’, அவர்களோடு மதிப்பிற்குரிய சோனம் வாங்சுக் மற்றும் இளைஞர்களுக்குத் துணையாக நின்ற ஒவ்வொருவருக்கும் என் வாழ்த்துகள். ஒரு ஆட்சியையே மண்டியிட வைக்க உங்களால் முடியும் என்பதை நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
