ஆணுறுப்பை பெரிதாக்க ஊசி போட்ட பிரபலம் மரணம்!. ரூ.7 கோடி தங்கப் பேழையில் இறுதிச்சடங்கு!. ஆடம்பர வாழ்க்கைக்கே பேராபத்து! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

தாய்லாந்தில் ஆணுறுப்பை பெரிதாக்கும் அழகுசாதன சிகிச்சை செய்துகொண்ட பிரிட்டன்-நைஜீரிய சமூக ஊடக பிரபலம் மற்றும் தொழிலதிபரான இகோ “டைனி” உபிரிகோ (43), சிகிச்சையில் ஏற்பட்ட பக்கவிளைவு காரணமாக உயிரிழந்தார்.

லண்டனைச் சேர்ந்த 43 வயதான இகோ உபிரிகோ, தனது மனைவியுடன் தாய்லாந்தின் பாங்காக் நகருக்குச் சுற்றுலா சென்றிருந்தபோது அங்குள்ள ஒரு கிளினிக்கில் 40 மில்லி லிட்டர் ஹைலூரோனிக் அமிலம் (Hyaluronic Acid) மற்றும் லிடோகைன் (Lidocaine) ஊசிகளைச் செலுத்திக்கொண்டார். சிகிச்சைக்குப் பிறகு ஹோட்டலுக்குத் திரும்பிய அவர், மசாஜ் செய்யச் சென்ற இடத்தில் கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டு இரண்டு முறை மயக்கமடைந்தார். உடனடியாக சுகும்விட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

லண்டன் உடற்கூறாய்வு அறிக்கையில், அவருக்கு ‘பல்மோனரி எம்போலிசம்’ (Pulmonary Embolism) அதாவது நுரையீரலில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டது மரணத்திற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊசி மூலம் செலுத்தப்பட்ட அமிலம் ரத்த ஓட்டத்தில் கலந்து நுரையீரலை அடைத்ததால் இந்த ஆபத்தான நிலை உருவாகியதாக உடற்கூறாய்வு அதிகாரி ஜீன் ஹார்கின் உறுதிப்படுத்தியுள்ளார்.

யார் இந்த இகோ உபிரிகோ? இன்ஸ்டாகிராமில் 1,85,000-க்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களைக் கொண்ட இவர், தனது ஆடம்பர வாழ்க்கையினால் புகழ்பெற்றவர். லாஸ் ஏஞ்சல்ஸின் கிரென்ஷா பகுதியில் $1.1 மில்லியன் (ரூ.10.39 கோடி)மதிப்புள்ள ஒரு வீட்டையும், லண்டனில் $600,000 (ரூ.5.66 கோடி) மதிப்புள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பையும் அவர் வைத்திருந்தார். அவரும், ஆடை வடிவமைப்பாளரும் சமூகப் பிரபலமுமான டேனியலும், 2022-ல் ஜிம்பாப்வேயில் 473,000 டாலர் (ரூ.4.46 கோடி)செலவில் ஒரு பிரம்மாண்டமான விழாவில் திருமணம் செய்துகொண்டனர்.

இந்தநிலையில், லண்டனில் $745,000 (ரூ.7.04 கோடி) மதிப்பிலான தங்கப் பேழையில் நடைபெற்ற இவரது அடக்க நிகழ்வில் நைஜீரியப் பாடகர் டேவிடோ உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

மருத்துவ நிபுணர்கள் இது போன்ற தேவையற்ற அழகுசாதன அறுவை சிகிச்சைகள் மற்றும் ஊசிகள் உயிருக்கே ஆபத்தாக முடியும் என எச்சரிக்கின்றனர்.

Source link