ஆபாசத்தையே அடிநாதமாகக் கொண்ட திமுக – தவெக ஐடி விங் கடும் தாக்கு – dmk rooted in obscenity tvk it wing launches scathing attack

தமிழக சட்டமன்றத்தில் சில நாட்களுக்கு முன் முதல்வர் விஜய் மிசா குறித்தும், சர்க்காரியா கமிஷன் குறித்தும் பேசியிருந்தார். இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை கடுமையாக விமர்சித்து தமிழக வெற்றிக் கழக ஐடி விங் சார்பில் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

அதில், பொய்ப் போராளியின் போலி பிம்பம் உடைந்துவிட்டதே என்று பதறி, போராட்டம் என்ற பெயரில் “யாருமே இல்லாத டீக்கடையில் யாருக்கு டீ ஆற்றி” கதறுகிறார்கள் கொத்து பரோட்டாக்கள் எனவும், மஞ்சள் துண்டு தந்தை முதல் ஆபாசநதி வரை, ஆபாசத்தையே அடிநாதமாகக் கொண்ட திமுக, இன்றும் ஆபாசநதியையும் வன்மநதியையும் வஞ்சனையில்லாமல் போராட்ட நாடகத்தில் ஓடவிட்டிருக்கிறது என தெரிவித்துள்ளனர்.

மேலும் கட்டமைக்கப்பட்டப் போலி பிம்பம் உடைந்ததற்காகக் கதறும் கொத்து பரோட்டாக்கள், “Detention Copy எங்கே?” என்று கேட்டால், மீண்டும் கட்டுமரக் கதையைக் கட்டவிழ்த்துவிடுகிறார்கள் என கடுமையாக சாடி தவெக ஐடி விங், கத்தினாலும், கதறினாலும், இனி கட்டுமரக் கதைகளால் மக்களை ஏமாற்ற முடியாது என்பதுதான் நிதர்சனம் என பதிவிட்டுள்ளனர்.

Source link