திமுக சென்னை கிழக்கு மாவட்டம் மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது. கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன் கலந்துகொண்டு பேசியபோது, முதலமைச்சர் விஜயை இழிவானவும், அருவருக்கத்தக்க வார்த்தைகளால் விமர்சித்துப் பேசி இருந்தார்.
அப்போது மேடையில் இருந்த சென்னை மேயர் பிரியா, திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கவுன்சிலரின் பேச்சைக் கேட்டு குலுங்கி குலுங்கிச் சிரிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் கடுமையான விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
இது தவெகவினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்,தவெக அமைச்சர் விஜயலட்சுமி இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:ஆபாசப் பேச்சுகளையும் அவதூறு அரசியலையும் கைவிட்டு, ஜனநாயக நெறிகளுக்கு உட்பட்டு அரசியல் களமாட திமுகவினர் இனியாவது கற்றுக்கொள்ள வேண்டும்
திமுகவினரின் ஆபாச மற்றும் அருவருக்கத்தக்க பேச்சுகளைக் கண்டு அகமகிழும் சென்னை மேயருக்கும், திமுக மாநில மகளிர் அணிச் செயலாளர் கனிமொழிக்கும் இது கடைசி எச்சரிக்கை என்று தெரிவித்துள்ளார்.
