காபூல்: ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் தொடர் மழைக்கு இதுவரை 23 பேர் பலியாகி இருக்கின்றனர். 100க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர்.
நூரிஸ்தான் மாகாணம் மற்றும் அதன் தலைநகர் ப்ரூனில் கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாது பெய்த மழையால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதில் இடிபாடுகளில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
34 மாகாணங்களில் 10 மாகாணங்கள் கடும் சேதத்தை சந்தித்து உள்ளன. கிட்டத்தட்ட 23 பேர் மழைக்கு பலியாகி உள்ளனர். மழை, வெள்ளத்தில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருக்கின்றனர்.
மழையால் ஏராளமான குடியிருப்புகள், வணிக வளாக கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளன. 70 கடைகள், 11 ஹோட்டல்கள் முழுமையாக இடிந்துள்ளன. தேடுதல் மற்றும் சீரமைப்பு பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் களம் இறங்கி உள்ளனர்.
