ஆப்கானிஸ்தான் பேட்டிங்கில் முன்னேற்றம் தேவை – பய்பஸ் பேட்டி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு ஆப்கானிஸ்தான் தயாராகி வரும் நிலையில், ,ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிச்சர்ட் பய்பஸ், டி20 சர்வதேசப் போட்டிகளில் அணியின் பேட்டிங் திறனை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்தது. , பேட்டிங் பிரிவு எதிர்பார்த்த அளவுக்குச் செயல்படத் தவறியது. கடந்த ஓராண்டில் ஆப்கானிஸ்தான் அணி டி20 சர்வதேசப் போட்டிகளில் 43 சதவீத டாட் பால்களைச் சந்தித்துள்ளது. 136.4 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் எடுத்துள்ளது.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

டாட் பால்களைக் குறைத்து, பேட்டர்களின் ஸ்ட்ரைக் ரேட்டை அதிகரிக்க வேண்டும்.இந்தியாவுக்கு எதிரான தொடரில் தோல்வியைச் சந்தித்தாலும், உலகின் முன்னணி அணியுடன் விளையாடியது தங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்துகொள்ள உதவியது.முன்னாள் கேப்டன் ரஷித் கான் புதிய கேப்டனுக்கு முழு ஆதரவு அளித்து வருகிறார். என தெரிவித்துள்ளார்.

Source link