தேனி,
இயக்குனர் பாரதிராஜா கிராமிய மண்வாசனையோடு திரைப்படங்கள் எடுத்தவர். அவருக்கு அரசு அமைக்கும் மணிமண்டப வடிவமைப்பு கிராமிய மண்வாசனையையும், அவருடைய படைப்புகளையும் பிரதிலிக்கும் வகையில் இருக்க வேண்டும்” என குடும்பத்தின்ர் கோரிக்கை வைத்துள்ளனர்
இயக்குனர் இமயம் பாரதிராஜா
“இயக்குனர் இமயம்’ என்று அழைக்கப்பட்ட திரைப்பட இயக்குனர் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் 10-ந்தேதி உயிரிழந்தார். அவருடைய உடல், தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே காட்ரோடு பகுதியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மறைந்த இயக்குனர் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து பாரதிராஜாவின் சாதனைகளை போற்றும் வகையில் ரூ.2½ கோடியில் தேனியில் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்திருந்தார்.
கிராமிய மண்வாசனையோடு மணிமண்டபம்
இதையடுத்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு பாரதிராஜாவின் மனைவி சந்திரலீலா, மகள் ஜனனி ஐஸ்வர்யா ஆகியோர் நேற்று வந்தனர். மணிமண்டபம் வடிவமைப்பு தொடர்பாக கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், “இயக்குனர் பாரதிராஜா கிராமிய மண்வாசனையோடு திரைப்படங்கள் எடுத்தவர். அவருக்கு அரசு அமைக்கும் மணிமண்டப வடிவமைப்பு கிராமிய மண்வாசனையையும், அவருடைய படைப்புகளையும் பிரதிலிக்கும் வகையில் இருக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.
பாரதிராஜாவின் குடும்பத்தினர் முன்வைத்த கோரிக்கையின்படி, பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
