”ஆம்புலன்சில் வெ@த்த ஆக்சிஜன் சிலிண்டர்”; வெளிப்படையான விசாரணைக்கு அதிபர் நேரடி உத்தரவு

அவசர ஊர்தியில் (ஆம்புலன்ஸ்) ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

பாகிஸ்தானின், சிந்து மாகாணம், தார்பார்க்கர் மாவட்டம், தனோ தந்தால் பகுதியில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்திலிருந்து, பிரசவத்திற்கு பிந்தைய உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட பெண்ணை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, அப்பெண்ணை மருத்துவமனைக்கு அவசர ஊர்தியில் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

அப்போது, அவசர ஊர்திக்குள் இருந்த ஆக்சிஜன் சிலிண்டரை ஓட்டுநர் நகர்த்த முயன்ற போது, எதிர்பாராத விதமாக அந்த சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இந்த கோரச் சம்பவத்தில், 10 க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். இதில், மருத்துவ ஊழியர்கள், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது உறவினர்கள் ஆகியோர் உயிர் இழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இதனிடையே, பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி இந்த விபத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், இதுகுறித்து விரைவான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.