ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 10 பேருக்கு நேரடித் தொடர்பு உள்ளது: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ நிலை அறிக்கை தாக்கல்

புதுடெல்லி/சென்னை: பகுஜன் சமாஜ் கட்​சி​யின் முன்​னாள் தமிழ்​நாடு மாநிலத் தலை​வர் ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்​கில், 10 பேருக்கு நேரடித் தொடர்பு இருப்​பது விசா​ரணை​யில் தெரிய​ வந்​துள்​ள​தாக உச்ச நீதி​மன்​றத்​தில் சிபிஐ நிலை அறிக்கை தாக்​கல் செய்​துள்​ளது.

அந்த அறிக்​கை​யில் மேலும் கூறி​யிருப்​ப​தாவது: பகுஜன் சமாஜ் கட்​சி​யின் தமிழக முன்​னாள் தலை​வர் ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்​றப்​பட்​டதைத் தொடர்ந்து, புதிதாக வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கிறது.

தமிழ்​நாடு காவல்​துறை​யிடம் இருந்த அனைத்து ஆவணங்​களும் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளன.சம்​பவம் நடந்த இடத்​தில் ஆய்வு செய்​ததுடன், ஆம்​ஸ்ட்​ராங்​கின் குடும்​பத்​தினர் மற்​றும் நேரில் பார்த்த சாட்​சிகளிடமும் விசா​ரணை நடத்​தப்​பட்​டது.

குற்​றம் ​சாட்​டப்​பட்ட 30 பேரில் 26 பேரடம் குறுக்கு விசா​ரணை நடத்​தப்​பட்​டதில், அருள், பொன்னை பாலு, ராமு, திரு​வேங்​கடம், திரு​மலை, மணிவண்​ணன், சிவா, விஜய், கோகுல், சந்​தோஷ் ஆகிய 10 பேர் நேரடி​யாகக் கொலை​யில் ஈடு​பட்​டுள்​ளது கண்​டறியப்​பட்​டுள்​ளது.

மற்​றவர்​கள் ஆயுதங்​கள் மற்​றும் நாட்டு வெடிகுண்​டுகள் வழங்​குதல், பண உதவி செய்​தல், வாக​னங்​களை ஏற்​பாடு செய்​தல் உள்​ளிட்ட செயல்​களில் ஈடு​பட்​டிருக்​கலாம்.

வழக்​கில் தொடர்​புடைய செந்​தில், மொட்டை கிருஷ்​ணன் ஆகியோர் இங்​கிலாந்து மற்​றும் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் இருப்​ப​தாகத் தகவல் கிடைத்​துள்​ள​தால், அவர்​களது வங்​கிப் பரிவர்த்​தனைகள் கண்​காணிக்​கப்​பட்டு வரு​கிறது.

குற்​றம்​சாட்​டப்​பட்ட நாகேந்​திரன் உடல்​நலக்​குறைவால் உயி​ரிழந்த நிலை​யில், திரு​வேங்​கடம் காவல்​துறை என்​கவுண்​டரில் கொல்​லப்​பட்​டுள்​ளார்.

ஆம்​ஸ்ட்​ராங் கொலைக்கு ஒரு மாதத்​துக்கு முன்பு முக்​கியக் குற்​றவாளி​களான அருள் மற்​றும் திரு​வேங்​கடத்தை அஸ்​வத்​தாமன் சந்​தித்​துப் பேசி​யது தொடர்​பாகவும், அவர்​களது தொலைபேசி உரையாடல்​கள் மற்​றும் வங்​கிப் பரிவர்த்​தனைகள் குறித்து விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது.

குற்​றம் ​சாட்​டப்​பட்ட நபர்களின் கைபேசி உரையாடல்​, வாட்​ஸ் அப் தகவல், இணை​யத் தரவுகள், டிஜிட்​டல் சிம் தரவு விவரங்​கள், கைப்​பற்​றப்​பட்ட 50 அலைபேசி எண்​களின் தரவு​கள், வங்​கிக் கணக்​கு​கள் ஆய்வு செய்​யப்​பட்டு வரு​கின்​றன.

ஆம்​ஸ்ட்​ராங் கொலை​யில் தொடர்​புடைய அனைவரை​யும் சட்​டத்​தின் முன் நிறுத்​தும் நோக்​கில் அறி​வியல்​பூர்​வ​மாகவும் பாரபட்​சமின்​றியும் விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. தற்​போதைய நிலை அறிக்​கையை ஏற்​றுக்​கொண்டு விசா​ரணை​யைத் தொடர்ந்து நடத்​தவும், சம்​பந்​தப்​பட்ட நீதி​மன்​றத்​தில் குற்​றப்​பத்​தி​ரிகை தாக்​கல் செய்ய அனுமதிக்​கவும் உச்ச நீதி​மன்​றத்​திடம் சிபிஐ கோரிக்கை விடுத்​துள்​ளது.

Source link