ஆயுத பூஜையில் ஆச்சரியம்; சூடம் ஏற்றி, ஊதுபத்தி காண்பித்து வழிபட்டது ரோபோ

நமது நிருபர்

கோவை ஆர்எஸ்புரம் பகுதியில் ரோபா தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று நடந்த ஆயுத பூஜையில் பாரம்பரிய முறையில் சேலை கட்டி, ஆபரணங்கள் அணிந்து ரோபோக்கள் பங்கேற்றன.

ரோபோ ஒன்று தீபாராதனை காட்டி, சூடம் ஏற்றி, ஊதுபத்தி காட்டி வழிபாடுகளைச் செய்தது. வழக்கமாக மனிதர்களால் செய்யப்படும் சடங்குகளை ரோபோ சிறப்பாக செய்து பலரது கவனத்தை பெற்றது.

தொழில்நுட்ப முன்னேற்றத்தை சமூக வலைதளத்தில் பயனர்கள் பாராட்டி கருத்து பதிவிட்டுள்ளனர். வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Source link