ஆர்எஸ்எஸ் கோட்டையை உடைத்த காங்கிரஸ்.. நாக்பூர் எம்எல்சி தேர்தலில் அமோக வெற்றி! பாஜகவுக்கு ஷாக்

மும்பை: ஆர்எஸ்எஸ் கோட்டையான நாக்பூர் எம்எல்சி தேர்தலில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி காங்கிரஸ் கட்சியின் அபிஜித் கோவிந்தராவ் வஞ்சாரி அமோக வெற்றி பெற்றுள்ளார்.

பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமையகம் நாக்பூரில் அமைந்துள்ளது. இதுதவிர நாக்பூர் எம்பியாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இருக்கிறார். அதோடு மகாராஷ்டிரா முதல்வராக இருக்கும் தேவேந்திர பட்னாவிஸ்ம் நாக்பூரை சேர்ந்தவர் தான்.

இதனால் நாக்பூர் எப்போதுமே பாஜகவின் கோட்டையாக கருதப்படும். இந்நிலையில் தான் தற்போது பாஜக கோட்டையான நாக்பூரில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஓட்டை போட்டுள்ளது.

நாக்பூர் டிவிஷன் பட்டதாரி தொகுதிக்கான எம்எல்சி தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அபிஜித் கோவிந்தராவ் வஞ்சாரி அமோக வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து களமிறங்கிய பாஜக வேட்பாளர் சுதாகர் கோலே என்பவரை 3,271 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார். தற்போது வென்ற அபிஜித் கோவிந்தராவ் வஞ்சாரி கடந்த 2020 தேர்தலிலும் காங்கிரஸ் சார்பில் இந்த நாக்பூர் டிவிஷன் பட்டதாரி தொகுதியில் வென்று எம்எல்சி ஆன நிலையில் தற்போது மீண்டும் வாகை சூடியுள்ளார்.