தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்டவர் கமல்ஹாசன். அவரது தயாரிப்பில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான படம் மகளிர் மட்டும். ரேவதி, ஊர்வசி, ரோஹினி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் குறித்து நடிகை ரேவதி கூறியுள்ளார்.
சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான படம மகளிர் மட்டும். ரேவதி, ஊர்வசி, ரோஹினி ஆகியோருடன் நாசர் முக்கிய கேரக்டரில் நடித்த இந்த படத்தில், கிரேசி மோகன், ஆர்.எஸ்.சிவாஜி, உள்ளிட்ட பலருடன், கமல்ஹாசன் ஒரு கேமியோ கேரக்ரில் நடித்திருந்தார். 3 பெண்களுக்கும் ஒரு ஆணுக்கும் இடையே நடக்கும் போராட்டங்களை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
குறிப்பாக பிணமாக நடித்த நடிகர் நாகேஷின் நடிப்பு இன்றைக்கு பார்த்தாலும், ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறும் காட்சியாக உள்ளது. படத்திற்கு இளையராஜா இசையமைக்க, அனைத்து பாடல்களையும் வாலி எழுதியிருந்தார். இதில் வாலி எழுதிய கறவை மாடு 3 காளைமாடு 1 என்ற பாடல் பெண்கள் குறித்து அவமதிக்கும் வகையில் இருப்பதாக கூறி, ஊர்வசி இந்த பாடலில் நடிக்க முடியாது என்று கூறியுள்ளார். அதன்பிறகு வாலி அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்துள்ளார்.
தொடர்ந்து தனது அடுத்த படத்தில் டேக் இட் ஈஸி ஊர்வசி என்று பாடல் எழுதி ஊர்வசியை சந்தோஷப்படுத்தி இருப்பார் வாலி. அதேபோல் இந்த படத்தில் பைக் ஓட்டும் காட்சி ஒன்றில் நடிக்கும்போது நடந்த சுவாரஸ்யமான அனுபவம் குறித்து ரேவதி கூறியுள்ளார். நான் பைக் ஓட்டனும், எனக்கு பின்னால், ஊர்வசி அவருக்கு பின்னால் ரோஹினி உட்கார வேண்டும். காட்சி தொடங்குவதற்கு முன்பு இயக்குனர் என்னிடம் பண்ணிட முடியுமா என்று கேட்டார் நானும் ஓகே சொல்லிவிட்டேன்.
அதனைத் தொடர்ந்து பைக் ஓட்டு காட்சினேன். அடுத்து காட்சி தொடங்கும்போது, ஊர்வசி ஆஷா (ரேவதி உண்மையான பெயர்) என் உயிரே உன் கையில் தான் இருக்கிறது, என்னை எதும் பண்ணிடாத, என்று சொன்னார். நான் அதெல்லாம் ஒன்னும் இல்ல உட்காரு என்று சொன்னேன். அதற்கு அவர், எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது. பைக் ஓட்டும் முன்பே அவருக்கு கை கால் நடுங்க ஆரம்பித்துவிட்டது. நான் நம்புயா, கண்டிப்பா ஓட்டிடுவேன், கீழே விழ விடமாட்டேன், விழுந்தாலும் நீ நடுல உட்கார்ந்திருக்கே என்று சொன்னேன் இதுதான் அவர் கேரக்டர் என்று ரேவதி கூறியுள்ளார்.
