மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யும் பணிகள் துவங்கியுள்ளது. இதனையடுத்து தமிழக அரசியல் கட்சிகள் இடைத்தேர்தலுக்கான வேலைகளை தொடங்கியுள்ளது. இதனால் தமிழ்நாடு அரசியல் களத்தில் மீண்டும் தேர்தல் திருவிழா என்பது ஆரம்பித்துள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, அதற்கான பணிகளில் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளது அதிமுக. இந்த இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர், இன்று முதல் விருப்பமனு அளிக்கலாம் என நேற்றைய தினம் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இடைத்தேர்தலுக்காக புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகத்தை நேரில் சந்தித்து ஆதரவு கோரியுள்ளது அதிமுக. இது சம்பந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்று கொண்டிருக்கிறது.
Source link
