இடைத்தேர்தலை புறக்கணிக்கும் முடிவை மாற்றிய திமுக.. உதயநிதி கொடுத்த உறுதி: பின்னணியில் நடந்த சம்பவம் – udhayanidhi stalin opposed the decision to dmk boycott the by election

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை முதல் ஆளாக அறிவித்துள்ளது திமுக. இந்த இடைத்தேர்தலை திமுக புறக்கணிக்கும் என அரசியல் வட்டாரத்தில் தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக வேட்பாளர் சம்பந்தான அறிவிப்பினை திமுக வெளியிட்டுள்ளது. இது தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் இடைதேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் தேர்வு செய்ததில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய பங்கு வகித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

அதாவது தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 7 இடங்களில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்தான அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியானது. இதனையடுத்து இந்த இடைத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான திமுக புறக்கணிக்க உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இப்படியான நிலையில் திடீரென திமுக வேட்பாளர்கள் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பலரையும் ஆச்சரியம் அடைய செய்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின் எடுத்த முடிவு

இந்நிலையில் இதற்கு பின்னணியில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது மதுராந்தகம், தாராபுரம் இரண்டும் அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள் என்பதால் இடைத்தேர்தலை புறக்கணிக்கலாம் என்ற ஒரு கருத்து திமுகவில் உலவியதாக சொல்லப்படுகிறது. இதற்கு உதயநிதி கடும் எதிர்ப்பினை தெரிவித்து, இடைத்தேர்தலில் போட்டியிட்டே தீர வேண்டுமென உறுதியாக சொல்லிவிட்டாராம்.

இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற வைப்பது என் பொறுப்பு

இடைத்தேர்தலை புறக்கணிப்பது என்பது கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும். பயந்து ஓடிவிட்டோம் என்பதை வைத்து தவெக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைக்கும் எனக்கூறி வேட்பாளர் தேர்விலும் அவர் முக்கிய பங்கு ஆற்றியதாக கூறப்படுகிறது. அதோடு இரண்டு தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெற வைப்பது என்னுடைய பொறுப்பு எனவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாகவும் அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நான்குமுனை போட்டி

பிரதான எதிர்க்கட்சியான திமுக இடைத்தேர்தலை புறக்கணிப்பது என்பது அவர்களை பலவீனப்படுத்தும். தொண்டர்களை சோர்வடைய செய்யும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையில் தான் திமுகவின் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகி தமிழக அரசியல் களத்தினை சூடாக்கியுள்ளது. அதோடு இதன் மூலமாக இடைத்தேர்தலில் நான்குமுனை போட்டி நிலவ போவதும் உறுதியாகியுள்ளது.

திமுக ஆதரவாளர்கள் வரவேற்பு

இதற்கிடையில் திமுகவின் சட்டத்துறை இணை செயலாளரான பரந்தாமனுக்கு மதுராந்தகத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது இணைய திமுக ஆதரவாளர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்று வருகிறது. ஏனென்றால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றாலும், கட்சிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் பரந்தாமன். தவெகவின் அவதூறுகளுக்கு சரியான பதிலடி கொடுக்கும் நபராகவும் அவரை திமுகவினர் கருதுகின்றனர்.

தேர்தலில் திமுக தோற்க இதுவே காரணம்! அரசியல் விமர்சகர் மூர்த்தி பேட்டி

நிர்மல் குமாருக்கு பதிலடி இதற்கிடையில் மிசா குறித்து தவெக அமைச்சர் நிர்மல் குமார் நேற்றைய தினம் சட்டமன்றத்தில் தெரிவித்த கருத்துகளுக்கு பரந்தாமன் கடுமையான பதிலடி கொடுத்திருந்தார். இது சம்பந்தமாக அவர் பேசியுள்ளது தான் இணையத்தில் கவனம் பெற்று கொண்டிருக்கின்றன. இதனிடையில் அவருக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link