தமிழகத்தில் கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ஏழு தொகுதிகள் காலியாகின. இந்த தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் நடைபெறும் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தனித்தொகுதிகளான மதுராந்தகம் மற்றும் தாராபுரத்திற்கு தேர்தல் நடத்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
5முனைப்போட்டியாக மாற்றிய மதுராந்தகம் இடைத்தேர்தல்
அதன்படி, இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கியது இந்த இடைத்தேர்தலில்தமிழக வெற்றி கழகம், திமுக, அதிமுக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இடதுசாரிகள் களத்தில் குதித்துள்ளதால் தற்போது 5முனை போட்டியாக மாறி உள்ளது .இடதுசாரிகளை தவிர்த்து மீதமுள்ள நான்கு கட்சிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமாரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு அக்கட்சி சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக வேட்பாளர்கள் -வேட்புமனுத்தாக்கல்
இவர்களுக்கு போட்டியாக அதிமுகவும் கணிதா சம்பத் மற்றும் பானுமதியை இரண்டு தொகுதிகளில் களமிறக்கி உள்ளது. இந்த இடைத்தேர்தல் சட்டமன்ற தேர்தலை போல மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய தயாராகி வருகின்றனர். அதன்படி, தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேல் மற்றும் திமுக வேட்பாளர் பரந்தாமன் ஆகிய இருவரும் செப்டம்பர் 15-ஆம் தேதி ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.
இதனால் அன்றைய தினம் தேர்தல் களம் மேலும் பரபரப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கணிதா சம்பத் செப்டம்பர் 16-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் அடுத்தடுத்த நாட்களில் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுராந்தகம் தொகுதி வாக்களர்கள் விவரம்
இத்தொகுதியில் 1,04,886 ஆண்கள், 1,08,738 பெண்கள் மற்றும் 65 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,13,689 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக தொகுதி முழுவதும் மொத்தம் 285 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மனு தாக்கலின் முதல் நாளான இன்று அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்யும் அறைக்குள் வேட்பாளருடன் சேர்த்து 5 நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் விதிமீறல்களைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை
தேர்தல் விதிமீறல்கள் மற்றும் சட்டவிரோதப் பணப் புழக்கத்தைக் தடுக்க மொத்தம் 18 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 9 பறக்கும் படைகளும் (Flying Squads), 9 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் (Static Surveillance Teams) அடங்கும். இந்தக் குழுக்கள் சுழற்சி முறையில் தொகுதி முழுவதும் 24 மணி நேரமும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.
Source link
