‘இது டீம் கேம்; எல்லா இடத்துலயும் தமிழ்நாடு பிளேயருக்கு ஃபேவர் பண்ண முடியாது’: இந்திய கபடி அணியின் பயிற்சியாளர் கவிதா ஓபன் டாக்

முதலாவது காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 13 ஆண்கள், 10 பெண்கள் அணிகள் பங்கேற்றுள்ளன. ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய பெண்கள் அணி, 38-10 என்ற புள்ளி கணக்கில் நைஜீரியாவை தோற்கடித்து தொடர்ச்சியாக 4-வது வெற்றியை பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்துள்ளது. இந்த அரைஇறுதி போட்டி நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (அக்.30) மாலை 6 மணி முதல் தொடங்கி நடக்கிறது. 

கண் கலங்கிய கண்ணகி நகர் கார்த்திகா  

இந்நிலையில், இந்த காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் களமாடி இருக்கும் கண்ணகி நகர் கார்த்திகா மைதானத்திலே கண்கலங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆட்டத்தின் போது, பயிற்சியாளருடன் ஏற்பட்ட வருத்தம் காரணமாக, கார்த்திகா களத்தில் கண் கலங்குவது போன்ற வீடியோ வெளியாகியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. 

இந்த வீடியோக்களை பகிர்ந்து வரும் பலரும் கார்த்திகாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகிறார்கள். கார்த்திகாவுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட தேசிய கபடி வீரர் சுபா ராஜேஷ் இந்த சம்பவம் பற்றி வேதனை தெரிவித்து இருந்தார். அதில் அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயிற்சியாளர் கவிதா தமிழக வீராங்கனைக்கு சரியாக வாய்ப்பு வழங்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பி இருந்தார். 

விளக்கம் 

இந்த நிலையில், கண்ணகி நகர் கார்த்திகா  விவகாரம் தொடர்பாக இந்திய அணியின் பயிற்சியாளர் கவிதா செல்வராஜ் விளக்கம் அளித்துள்ளார். 

2010 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றவரான கவிதா, இது விவகாரம் தொடர்பாக தினமலர் இதழுக்கு அளித்திருக்கும் பேட்டியில், “கபடியை பொறுத்தவரைக்கும் இன்னைக்கு எப்படி இருக்காங்களோ நாளைக்கு அதே மாதிரி இருப்பாங்க. அதே performance இருக்கும்ன்னு சொல்ல முடியாது. இன்னைக்கு நல்லா விளையாடுறவங்க நாளைக்கு நல்லா விளையாட மாட்டாங்க. நாளைக்கு வந்து சூப்பரா விளையாடலாம். நேத்து நல்லா விளையாடி இருக்க மாட்டாங்க. இந்த மாதிரி வந்து ஒவ்வொரு நாளும் வந்து formats change ஆகும் sir. அத வச்சு ஒரு 10 வருஷத்துக்கு இப்போ நான் வந்து 10 வருஷத்துக்கு முன்னாடி நல்லா விளையாண்ட என்னால இப்போ விளையாட முடியுமா? Yes. 10. போன மாசம் நல்லா விளையாண்டவங்க. Injury னாலே game down ஆகி இருக்கும். அப்போ இப்போ வந்து injury இருக்கலாம். Surgery இருக்கலாம். போன மாசம் நல்லா விளையாடுறாங்க. அவங்களுக்கே selection கொடுக்கல அப்படின்னு நாம பேச முடியாது. அவங்களுக்கு injury னால Asian games வந்து கிடைக்காம போச்சுங்களா? அப்படி இருக்கும் போது இப்போ இருக்காங்க அப்படின்னு இப்ப இருக்காங்கனா இந்தியால இந்தியன் டீம்ல செலக்ட் இருக்காங்கன்னா அவங்க அவங்கள விட நல்லா விளையாடவங்க இருக்காங்க. இந்தியால player எல்லாருமே இருக்காங்க. அவங்க அவங்களுக்கு என்ன பண்ணணுமோ எனக்கு வந்து அந்த Indian team போச்சா? நான் கரெக்டா என்ன பண்ணணுமோ அந்த வேலையை தான் நான் பண்ணிட்டு இருக்கேன். நான் வந்து தமிழ்நாடுக்கு மட்டும் favor பண்ண ஒரு சில இடத்துல தான் தமிழ்நாட்டுக்கு சேவை பண்ண முடியும்.” என்று அவர் கூறியுள்ளார். 

Source link