இத்தாலியில் வசிக்கும் இந்தியர்கள் கவனம்: தூதரகம் எச்சரிக்கை

ரோம்:

அதிக செலவு, சமநிலையற்ற பொருளாதாரம் காரணமாக பிரான்சில் போராட்டம் நடக்கிறது. இது இத்தாலிக்கும் பரவியது. அதில் வன்முறை வெடித்தது. பெட்ரோல் குண்டுகள்,கற்கள் வீசப்பட்டதால், பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக இத்தாலியில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: இத்தாலியில் சில நகரங்களில், போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடக்கின்றன. இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும். அந்த இடங்களுக்கும், கூட்டமாக உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். போராட்டம் குறித்த அறிய உள்ளூர் நாளிதழ்களை கவனிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

Source link