சென்னை: “தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்துக்கும், தமிழக மக்களுக்கும் இடையிலான தேர்தல் இது” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம், சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் இபிஎஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “இது, தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்துக்கும், தமிழக மக்களுக்கும் இடையிலான தேர்தல். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் விசைத்தறி, கைத்தறி, விவசாயம் ஆகிய தொழிலகள் செழிக்கும். அதிமுகவுக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்து வருகின்றனர். அதிமுக கூட்டணி மிகவும் வலிமையான கூட்டணி. அதிமுக ஆட்சியில் விவசாயிகள் நலன் காக்கப்பட்டது, அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நெசவாளர்கள் நலன் காக்கப்படும்.
