இந்தியர்கள் இந்த பக்கம் கால் எடுத்து வைக்க கூடாது… கண்டிசனாக சொன்ன டெஸ்டினேஷன்; இந்த நாட்ட தான் அமெரிக்கா தாக்குது

இந்தியப் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணம் (Visa-Free Travel) என்பது எப்போதுமே வெளிநாட்டுச் சுற்றுலாவைத் திட்டமிடும் போது மிகப்பெரிய வசதியாக இருந்து வருகிறது. இது நேரத்தையும் ஆவணச் சமர்ப்பிப்புச் சிரமங்களையும் குறைத்து, திடீர்ப் பயணங்களை எளிதாக்குகிறது. ஆனால், 2026-ஆம் ஆண்டில் இந்தியர்களுக்கு விசா இல்லா நுழைவுச் சலுகை வழங்கி வந்த 4 முக்கிய நாடுகள் தங்களின் குடிவரவு விதிகளில் அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளன.

போறது ரொம்ப ஈஸி… ஆனா திரும்புறது கஷ்டம்; இந்த நாட்டுல எல்லாம் சுற்றுலாப் பயணிகள் கால் எடுத்து வைக்கவே கூடாது

ஈரான்  – விசா இல்லா சலுகை ரத்து

பாரசீகக் கட்டிடக்கலை, பட்டுப் பாதை பாரம்பரியம் மற்றும் தெஹ்ரான், இஸ்ஃபஹான், ஷிராஸ் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்களைக் கொண்ட ஈரான் நாடு, இந்தியப் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு வழங்கி வந்த விசா இல்லா நுழைவுச் சலுகையைத் திரும்பப் பெற்றுள்ளது. இனி ஈரான் செல்ல விரும்புவோர் கண்டிப்பாக விசா பெற வேண்டும்.

பொலிவியா  – முன்விசா (Advance Visa) கட்டாயம்

தென் அமெரிக்க நாடான பொலிவியா, அதன் புகழ்பெற்ற ‘சலார் டி உயுனி’ (Salar de Uyuni) உப்புப் படிமங்கள் மற்றும் ஆண்டிஸ் மலைத்தொடர்களுக்குப் பெயர் பெற்றது. இந்நாடு இந்தியர்களுக்கான எளிதான நுழைவு முறையை மாற்றி, பயணத்திற்கு முன்பே விசா பெறுவதைக் கட்டாயமாக்கியுள்ளது.

கேப் வெர்டே (Cape Verde) – வருகை நேர விசா நிறுத்தம்

அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள எரிமலைக் தீவு நாடான கேப் வெர்டே, கடற்கரைகளுக்கும் நீர் விளையாட்டுக்கும் புகழ்பெற்றது. இந்நாடு இந்தியா உட்படப் பல நாடுகளின் குடிமக்களுக்கு வழங்கி வந்த ‘விமான நிலைய வருகை நேர விசா’ (Visa on Arrival) வசதியைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இனி பயணிகள் அங்குச் செல்வதற்கு முன்பே நுழைவு அனுமதி பெற வேண்டும்.

நிகரகுவா – புதிய பயண அனுமதி தேவை

மத்திய அமெரிக்க நாடான நிகரகுவா, தனது குடிவரவுக் கொள்கையை மாற்றியமைத்துள்ளது. இனி இந்தியப் பயணிகள் நிகரகுவா செல்வதற்கு முன் பயண அனுமதியை முன்கூட்டியே விண்ணப்பித்துப் பெற வேண்டும்.

தற்போதைய நிலை என்ன?

சமீபத்திய ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் (Henley Passport Index) படி, இந்தியப் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இன்னமும் உலகளவில் சுமார் 55 நாடுகளுக்கு விசா இல்லாமலோ, வருகை நேர விசாவிலோ (Visa-On-Arrival) அல்லது மின்னணு பயண அனுமதி (eTA) மூலமாகவோ பயணம் செய்ய முடியும்.

சர்வதேச விசா விதிகள் அடிக்கடி மாற்றத்திற்கு உட்பட்டவை என்பதால், வெளிநாடுகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன், அந்தந்த நாடுகளின் தற்போதைய விசா நடைமுறைகளைத் துல்லியமாகச் சரிபார்த்துக் கொள்வது அவசியமாகும்.

Source link