இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்: சிஜேபி போராட்டம் குறித்த ஐநா விமர்சனத்தை ஒதுக்கிய மார்கோ ரூபியோ

மும்பை:

டில்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு எதிராக சிஜேபி இயக்கத்தினரின் போராட்டத்திற்கு எதிராக போலீசார் எடுத்த நடவடிக்கையை ஐநா விமர்சனம் செய்து இருந்தது.

இந்நிலையில், இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவிடம், போராட்டம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் அளித்த பதில்: இது இந்தியாவின் உள்நாட்டு அரசியல் விவகாரம். அவர்களின் அரசியலில் நான் தலையிட மாட்டேன். இந்தியாவில் ஜனநாயகம் உள்ளது. தேர்தல் நடக்கிறது. இதனால், உள்நாட்டு அரசியல் விவகாரத்தில் தலையிட மாட்டேன். அமெரிக்காவிலும் தினசரி போராட்டம் நடக்கிறது.

ஐரோப்பாவில் நடக்கும் கலவரத்தை பற்றி நான் பேசவில்லை. அங்கு அவர்கள் பொருட்களை சேதப்படுத்துகிறார்கள். கட்டடங்களை எரிக்கிறார்கள். ஆனால், போராட்டம் உள்ளிட்ட பல வழிகளில் மக்கள் தங்களை வெளிப்படுத்துவது னெ்பது அந்நாட்டில் அரசியல் கலந்துரையாடல் மற்றும் கருத்து வேறுபாடுகள் உள்ளன என்பதற்கு எடுத்துக்காட்டு ஆகும். இவ்வாறு மார்கோ ரூபியோ கூறினார்.

Source link