இந்தியாவின் 500 பேரை திடீரென பணியில் இருந்து நீக்கிய அமெரிக்க நிறுவனம்

– நமது நிருபர்-

ஏஐ ஆதிக்கம் காரணமாக உலகின் பல முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுகின்றன.

இதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக தங்களது கவலைகளை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இன்னோடேட்டா என்ற நிறுவனமும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய துவங்கியுள்ளது. 1988 ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்நிறுவனம், டேட்டா இன்ஜினியரிங் மற்றும் ஏஐ சேவைகளை வழங்குகிறது. இந்தியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கிளை உள்ளது. 10,107 பேர் பணியாற்றுகின்றனர்.

இந்தியாவில் பணியாற்றும் ஊழியர்கள் இன்று காலை வழக்கம்போல் பணியை துவங்கினர். லேப்டாப்பை ஆன் செய்து, வருகைப்பதிவேட்டில் பதிவு செய்தனர். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு அவர்களின் லேப்டாப் திடீரென லாக் அவுட் ஆனது. அவர்களின் ஐடியும் முடங்கின. இதன் பிறகு தான் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது தெரிந்தது. அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான உத்தரவு இமெயில் வாயிலாக அனுப்பப்பட்டது.

இந்தியாவில் மட்டும் 550 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பிலிப்பைன்சிலும் பணி நீக்கம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Source link