இந்தியா வருகிறார் போலந்து பிரதமர்; அக்டோபர் 22ல் மோடியுடன் பேச்சு

புதுடில்லி: பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் அக்டோபர் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை இந்தியாவுக்கு வருகிறார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவருடன் போலந்தின் நிதி மற்றும் பொருளாதார அமைச்சர் ஆண்ட்ரெஜ் டோமான்ஸ்கி வருகிறார். இரு நாடுகளுக்கிடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.

அக்டோபர் 22ம் தேதி டில்லியில் பிரதமர் மோடியுடன் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இரு தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். பெங்களூருவிற்கும் டொனால்ட் டஸ்க் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அங்கு அவர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளித் துறைகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட வணிகத் தரப்பினரைச் சந்திக்க உள்ளார்.

வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, எரிசக்தி, பசுமைத் தொழில்நுட்பங்கள், விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் உறவை வலுப்படுத்தும்; புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக முக்கிய பயணமாக அமையும் என வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link