இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் தந்தை காலமானார்

கொச்சி,

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் தந்தை காலமானார்.

உயிரிழந்தார்

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். இவரது தந்தை சாந்தகுமாரன். இவருக்கு வயது 89.

இதற்கிடையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தகுமாரன், நேற்று இரவு 9.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நாளை இறுதிச்சடங்கு

தற்போது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடல் நாளை கோதமங்கலத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அவரது உடல் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் மாலை 4 மணிக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறுகின்றன.

அவரது மறைவுக்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Source link