”இந்த வயசிலயேவா…?”; தாயை மிஞ்சிய அசினின் மகள்!

திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகிய அசின், தற்போது குடும்ப வாழ்க்கையில் முழு கவனம் செலுத்தி வருகிறார். 

இந்நிலையில், அவரது காதல் கணவரும், தொழிலதிபருமான ராகுல் சர்மா, தனது மனைவி மற்றும் மகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தனது மனைவி அசின் குறித்துப் பேசிய அவர், ”குடும்ப வாழ்க்கை மற்றும் குழந்தை வளர்ப்பு போன்ற விவகாரங்களில் என்  மனைவி மிகவும் திறமையானவர். அவர், என் வாழ்க்கையின் மிகப் பெரிய பலமாக இருக்கிறார். மேலும், அவர் என்னை நன்கு புரிந்து வைத்திருக்கிறார். எந்தவித கடினமான நேரங்களிலும் என்னை ஊக்குவித்து தைரியம் கொடுக்கிறார்” என்று பேசினார்.  

இதைத் தொடர்ந்து தனது மகள் அரின் குறித்துப் பேசிய ராகுல், ”அசினுக்கு தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் என மொத்தம் 7 மொழிகள் தெரியும். ஆனால், மகள் அரினுக்கு கொரிய மொழி, ஜப்பானிய மொழி, சீன மொழி என 12 மொழிகள் தெரியும். அதில் அவர் பேசவும் செய்வார். ஆனால் நானும், மனைவியும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் பேசுவோம். எங்கள் வீட்டில் டிவி இல்லை. அரினுக்கு செல்போன் கொடுக்க மாட்டோம். எங்கள் வீட்டில் ஏகப்பட்ட புத்தகங்கள் உள்ளது. அரின் இரண்டாம் வகுப்பு தான் படிக்கிறார். ஆனாலும் 8ம் வகுப்பு, 9ம் வகுப்பு புத்தகங்கள் கூட வீட்டில் இருக்கிறது. அரின் இப்படி வளர அசின் தான் காரணம்”   என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.  

இது குறித்து சமூக வலைத்தளங்களில் வைராலான நிலையில், ”ஒரு பிரபலமான நடிகையாக இருந்த அசின், தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார். பல பிரபலங்கள் பல்வேறு வகையான கிசுகிசுக்கள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கி வாழ்க்கையை இழந்துவிடுகின்றனர். இந்நிலையில், பிரபலங்கள் எப்படி தங்களது வாழ்க்கையை அமைதியாகவும், மகிழ்சியாகவும் கொண்டுசெல்ல வேண்டுமென அசினிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.  மேலும், தனது தாயைவிட அதிக மொழிகளை கற்றதுடன், இந்த வயதிலேயே மேற்வகுப்பு புத்தகங்களைப் படிக்கும் அளவிற்கான திறமை கொண்டுள்ள அரின் குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.