‘இனி அன்புமணி பார்த்துக்கொள்வார்’-அரசியல் துறவறம் அறிவித்தார் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸின் 88வது பிறந்தநாள் இன்று விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள தோட்டத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அன்புமணி மற்றும் பாமக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இந்தநிலையில் நிகழ்வு மேடையில் பேசிய ராமதாஸ் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ”இன்று முதல் நான் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன். அரசியல் துறவறம் என்று சொன்னால் அரசியலை பேச மாட்டேன். அரசியலில் எதையும் வலியுறுத்த மாட்டேன். வருபவர்களை பார்ப்பேன் நலம் விசாரிப்பேன் அவ்வளவுதான். அந்த வகையில் அரசியலில் இருந்து தலையிட மாட்டேன். அதை அன்புமணி அவர்கள் பார்த்துக் கொள்வார்” என்றார்.

முன்னதாக ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே ஏற்பட்ட அரசியல் முரண் காரணமாக பாமகவில் பிளவு ஏற்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அண்மையில் அன்புமணி தந்தை ராமதாஸை சந்தித்திருந்த நிலையில் அந்த மோதல் முடிவுக்கு வந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் அவரது 88 ஆவது பிறந்த நாளான இன்று தற்போது ராமதாஸ் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link