இனி டெங்கு பயம் வேண்டாம்! இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசி அறிமுகம்..!!

குறிப்பாக இது நான்கு வகையான டெங்கு வைரஸ்களுக்கும் (DENV-1, DENV-2, DENV-3 மற்றும் DENV-4) எதிராகப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதற்கு முன் டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் இதனைச் செலுத்தலாம். தடுப்பூசி போடுவதற்கு முன் பரிசோதனைகள் தேவையில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதாவது, சில டெங்கு தடுப்பூசிகளைப் போலல்லாமல், ‘கியூடெங்கா’ தடுப்பூசிக்கு முன் பரிசோதனை தேவையில்லை. இதனால், தகுதியுள்ள நபர்கள், முன்பு டெங்கு தொற்று ஏற்பட்டதா என முதலில் பரிசோதிக்கப்படாமலேயே தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

டெங்கு பரவலாக உள்ள நாடுகள் மற்றும் மற்ற பிராந்தியங்களில், 28,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய 19 முதற்கட்ட, இரண்டாம் மற்றும் மூன்றாம் மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்பு, இந்தியாவில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Source link