ரசிகர்கள் நிதியுதவியுடன் ஐபோன் வாங்கிய இன்ஸ்டா வீரமணி, தனக்கு நேர்ந்த ஆன்லைன் கேஷ் ஆன் டெலிவரி தொல்லைகள் குறித்து மனம் திறந்துள்ளார்.
சமூக ஊடகங்களின் அசாத்திய வளர்ச்சியால், எளிய மனிதர்களும் தங்களின் தனித்துவமான எதார்த்த குணம் மூலம் மிகக் குறுகிய காலத்தில் மக்களிடையே பெரும் பிரபலமடைந்து விடுகிறார்கள். அந்த வகையில், தனது சுவாரசியமான வீடியோக்கள் மூலம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து பரவலாக அறியப்படும் இன்ஸ்டா வீரமணி (Insta Veeramani), சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் தனது இன்ஸ்டா நிக்ழ்வுகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை சவால்கள் குறித்து சில சுவாரசியமான உண்மைகளை உரக்கப் பேசியுள்ளார்.
கிரவுட் ஃபண்டிங் (Crowdfund) மூலம் கிடைத்த முதல் ஐபோன்!
வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ் தளம் மூலம் பயணத்தைத் தொடங்கிய வீரமணி, தரமான Vlogging செய்வதற்காக ஒரு நல்ல மொபைல் போன் வாங்க விரும்பியுள்ளார். எனினும், அதற்கான பொருளாதார சூழல் அப்போது அவருக்குச் சாதகமாக இருக்கவில்லை. இதுகுறித்துத் தனது நேர்காணலில் பேசிய அவர், “நான் ஆரம்பத்தில் ஒரு வீடியோவில் ‘நண்பர்களே, வோல்க் செய்ய ஐபோன் வாங்க ஆசைப்படுகிறேன். உங்களால் முடிந்த சிறிய பங்களிப்பைக் கொடுத்து உதவுங்கள்’ என்று ஒரு சாதாரணமான கிரவுட் ஃபண்டிங் (Crowdfunding) கோரிக்கையைத் தான் ரசிகர்கள் முன் வைத்தேன்” எனக் குறிப்பிட்டார்.
வீரமணியின் முதல் ஐ போன்
ரசிகர்களின் அமோக ஆதரவின் காரணமாக, பலர் ₹500, ₹1000 என தங்களால் இயன்ற நிதியுதவியை அவரது கணக்கிற்கு அனுப்பியுள்ளனர். குறிப்பாக, ரசிகர் ஒருவர் மட்டும் தனிப்பட்ட முறையில் ₹6000 முதல் ₹7000 வரை கொடுத்து உதவியதாக நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ₹30,000 வரை நிதி திரட்டப்பட்டு, வீரமணி தனது முதல் ஐபோனை (iPhone) வெற்றிகரமாக வாங்கியுள்ளார்.
எல்ல மீறிய பாசம்: ஆன்லைன் டெலிவரி கொடுத்த மன உளைச்சல்!
ரசிகர்களின் இந்தத் தூய்மையான அன்பிற்குப் பின்னால், இணையப் புகழால் தனக்கு ஏற்பட்ட மற்றொரு நிழல் உலகத் துயரத்தையும் அவர் பகிர்ந்து கொள்ளத் தவறவில்லை. வீரமணி பிரபலமானதை அடுத்து, சிலர் அவரது வீட்டு முகவரியைக் கண்டறிந்து தேவையற்ற குறும்புத்தனங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அவரது அனுமதி அல்லது ஒப்புதல் ஏதுமின்றி, அவரது முகவரிக்கு ‘கேஷ் ஆன் டெலிவரி’ (COD) முறையில் தொலைக்காட்சி பெட்டிகள் (TV), குளிர்சாதனப் பெட்டிகள் (Fridge) போன்ற பெரிய வீட்டு உபயோகப் பொருட்களை அடுத்தடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்து விளையாடியுள்ளனர். வீட்டு வாசலுக்குத் தேடி வரும் இத்தகைய தேவையற்ற டெலிவரிகள் மற்றும் ஆன்லைன் அத்துமீறல்கள் தன்னைத் தனிப்பட்ட முறையில் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக வேதனையுடன் தெரிவித்தார்.
நெட்வொர்க் வேலை முதல் கியூஆர் கோடு (QR code) விநியோகம் வரை!
தனது இந்தத் தற்போதைய நிலைக்கு முன்னால் இருந்த மிகக் கடினமான உழைப்புப் பயணத்தையும் வீரமணி வெளிச்சமிட்டுக் காட்டினார். ஆரம்பக் காலங்களில், ஒரு நெட்வொர்க் நிறுவனத்திலும், அதனைத் தொடர்ந்து கடைகளுக்கான கியூஆர் கோடு (QR code) விநியோகிக்கும் களப் பணியிலும் மிகக் குறைந்த வருமானத்தில் தான் கடுமையாக உழைத்ததாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், ஆன்மீகத்தில் தனக்கு இருக்கும் தீவிர ஈடுபாட்டையும், குறிப்பாக முருகர் வழிபாடு தனக்கு எத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளிலும் ஒரு மாபெரும் மன அமைதியைத் தருகிறது என்பதையும் பகிர்ந்துகொண்டார்.
தளபதி விஜய் மீதான சினிமா ஆசை!
நேர்காணலின் இறுதிப் பகுதியில், திரையுலகம் மீது தனக்கு இருக்கும் தீராத தாகத்தை வெளிப்படுத்திய வீரமணி, தனக்குப் பிடித்தமான ஒரே மாஸ் நடிகர் தளபதி விஜய் தான் எனக் குறிப்பிட்டார். சமூக ஊடகப் பிரபலங்கள் தங்களின் எதார்த்தமான குணத்தால் பிரபலமடைந்தாலும், சைபர் உலகில் தங்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் முகவரிகள் போன்ற ரகசியத் தரவுகளை மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என்ற மிக முக்கியமான அறிவுரையுடன் இந்த நேர்காணல் நிறைவடைந்தது.
Source link
