தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார். இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவருக்கும் நிதியுதவியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக வெளியான அறிவிப்பில், “வேலூர் மாவட்டம் அணைக்கட்டு கிராமத்தில் நேற்று (21.10.2020) தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்கும்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில், அங்கு பணியிலிருந்த கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த காயத்ரி (40) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.”
இவ்விபத்தில் படுகாயமடைந்து, அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சங்கீதா (வயது 35) என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.”
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் மற்றும் பலத்த காயமுற்று மருத்துவ சிகிச்சை பெற்றுவருபவருக்கு ரூ.1 லட்சம் முதலமைச்சரின் பொது நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
