இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..! இனி 4 மணி நேரத்தில் வீடு தேடி வரும் சிலிண்டர்..!

அதாவது இனிமேல் 10 கிலோ சிலிண்டராக இருந்தாலும் சரி அல்லது 5 கிலோ சிலிண்டராக (5 கிலோ ‘சோட்டா’ (Chhotu))இருந்தாலும் சரி, இரண்டும் வெறும் நான்கு மணி நேரத்திற்குள்ளேயே உங்களுக்குக் கிடைக்கும் வகையில் புதிய எக்ஸ்பிரஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பைபர் கலவையால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலிண்டர் எடை குறைவாக இருப்பதால் கையாள்வதற்கு மிகவும் எளிதானதாக இருக்கும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதல் முறையாக 5 கிலோ சிலிண்டரை பதிவு செய்யும் போது வைப்புத் தொகையுடன் சேர்த்து 3,500 ரூபாயும், 10 கிலோ சிலிண்டர் முன்பதிவுக்கு 5,002 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வகை சிலிண்டர்களுக்கு மத்திய அரசின் மானியம் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இன்டேன் ‘எக்ஸ்ட்ராலைட் நவ்’ (XtraLite) 10 கிலோ எடையைக் கொண்ட புதிய இலகுரக கலவை சிலிண்டர், சமையல் எரிவாயு துறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் முன்னேற்றமாகும். நகர்ப்புற குடும்பங்கள், பணியாளர்கள் மற்றும் சிறிய குடும்பங்களின் தேவைகளுக்கேற்ப நெகிழ்வான, வசதியான எல்பிஜி சேவைகளை வழங்கும் இந்தியன் ஆயிலின் உறுதிப்பாட்டை இந்த முயற்சி மேலும் வலுப்படுத்துகிறது.

Source link