ஜெயிலர் 2 பகவதி: ஜெயிலர் 2 படம் ஓடும் தியேட்டர்களில் கூட்டத்திற்கு குறைவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய அந்த படத்தில் நடித்தவர்கள் தங்களின் அனுபவம் மற்றும் ஜெயிலர் 2 வெற்றி குறித்து பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் தான் ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடித்த அனுபவம் பற்றி பேட்டி அளித்திருக்கிறார் பகவதி பெருமாள். அந்த பேட்டியில் அவர் சொன்ன விஷயம் ரசிகர்களை நெகிழ வைத்திருக்கிறது. பகவதி பெருமாள் கூறியதாவது, யாராக இருந்தாலும் நான் ஒரு நடிகர் என்பது தெரிந்திருக்க வேண்டும் என்று விரும்புவேன். நான் நடித்த படங்களை அவர்கள் பார்த்திருக்க வேண்டும் என்பது இல்லை.
ரஜினி, இளையராஜா: நான் பக்ஸ் என்பது தெரிந்தால் போதும் என நினைப்பேன். அப்படி இருக்கும்போது ரஜினிகாந்த் சார் என் நடிப்பை பார்த்து பாராட்டியது ரொம்ப பெரிய விஷயம். அவர் என்னை பாராட்டியபோது அவரிடம் நான் ஒரு விஷயம் சொன்னேன். உங்களிடம் கோடிப் பேர் பேசியிருப்பார்கள். நான் உங்களிடம் சொல்லப் போவது எதுவும் புதிது இல்லை. ஆனால் நான் உங்களிடம் பேசுவது எனக்கு புது விஷயம். எனவே, நான் பேசிக்கிறேன் சார் என்றதும் சொல்லுங்க என்றார்.
நீங்களும், ராஜா சாரும் ஒன்னு என நான் சொன்னதும் என்னையே பார்த்தார். நீங்களும், இளையராஜாவும் நான்கு தலைமுறைக்கு தவிர்க்க முடியாத,தடுக்க முடியாத ஆட்கள் என்றேன். அதே கேட்டு தலையாட்டிய ரஜினிகாந்த் சார் தன் கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீரை துடைத்தார். அதை பார்த்ததும் அய்யோ முதல் நாளே அவரை அழ வைக்கிறோமே என்று இருந்தது. நான் அவரிடம் என்ன பேச வேண்டும் என்று யோசித்துவிட்டு செல்லவில்லை. அந்த நேரத்தில் மனதில் தோன்றியதை சொன்னேன். இருவரையும் யாராலும் அவாய்ட் செய்ய முடியாது என்றார்.
பகவதி பெருமாள் சொன்னது ரஜினிகாந்த் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. அவர் சொன்ன விஷயம் உண்மை தானே. நான்கு தலைமுறைகள் கொண்டாடும் இசையமைப்பாளராக இளையராஜாவும், நடிகராக ரஜினிகாந்தும் இருக்கிறார்கள்.
ஜெயிலர் 2 வசூல்: ஜெயிலர் 2 வெறும் ஐந்து நாட்களில் ரூ. 477. 75 கோடி வசூல் செய்திருப்பதாக சாக்னிக் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த வசூல் விபரத்தை தலைவர் படத்தை தயாரித்திருக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. வசூல் குறித்து எந்த போஸ்டரும் வெளியிடாவிட்டாலும் ஜெயிலர் 2 வெற்றிநடை போடுகிறது. முத்துவேல் பாண்டியனின் ஆட்டத்தை உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் தியேட்டர்களில் பார்த்து ரசிக்கவும். கல்பக்ஸ் குடும்பமா, முத்துவேல் பாண்டியனா, ஜெயிக்கப் போவது யார் என்று நச்சு நச்சுனு கேப்ஷன் போட்டு ட்வீட் செய்து சினிமா ரசிகர்களின் ஆவலை தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறது சன் பிக்சர்ஸ்.
ஜெயிலர் 2 படம் பார்க்க பெற்றோருடன் குட்டீஸும் செல்கிறார்கள். தலைவர் நடிப்பை பார்த்து அவர்கள் சந்தோஷப்படும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. அடுத்த தலைமுறைக்கும் அவர் தான் சூப்பர் ஸ்டார் என்பதையே இது காட்டுகிறது.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என ஜெயிலர் 2 படத்தில் நடித்தவர்கள் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். 76 வயது நடிகரின் படம் கண்டபடி வசூல் செய்கிறது என பிற மொழி நடிகர்கள், நடிகைகளும் இன்ஸ்டாகிராமில் பாராட்டுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Source link
