இஸ்ரேல் தேர்தல் – கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி நெதன்யாகு கட்சி முன்னிலை

இஸ்ரேல் வரலாற்றிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ல் நடந்த ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, அந்த நாட்டில் நடக்கும் முதல் தேர்தல் இது என்பதால் ஒட்டுமொத்த உலக நாடுகளின் பார்வையும் இதன் மேல் திரும்பியுள்ளது.

தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசென்கோட் ஆகிய இரு துருவங்களுக்கு இடையே பிரதமர் நாற்காலியைக் கைப்பற்ற அசுரப் போட்டி நிலவி வரும் சூழலில், பொதுமக்கள் திரண்டு வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

120 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்க 61 இடங்கள் தேவை. வாக்குப்பதிவு முடிந்ததும் இஸ்ரேல் ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகளின்படி, நெதன்யாகுவிற்கு பின்னடைவு ஏற்படும் என்று கூறியிருந்தன. ஆனால், வாக்கு எண்ணிக்கையில் தற்போதய நிலவரப்படி நெதன்யாகு கட்சிஅங்கம் வகிக்கும் வலதுசாரி கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

54 இடங்களில் முன்னிலை

50 சதவீதத்திற்கும் மேலான வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி 54 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஐசென்கோட்டின் எதிர்க்கட்சிகள் கூட்டணி 48 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இன்னும் சுமார் 40 சதவீத வாக்குகள் எண்ண வேண்டியிருப்பதால் தேர்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் மாறக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

Source link