இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் சிகையலங்கார செலவு ரூ.4 கோடி

ஜெருசலேம்: கடந்த 2019 முதல், 2026 ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சிகையலங்காரம் மற்றும் ஒப்பனைக்காக 4.04 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக, அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேற்காசிய நாடான இஸ்ரேலைச் சேர்ந்த வழக்கறிஞர் யாரா விங்க்லர் ஷலித், கடந்த 2025 டிசம்பரில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் சிகையலங்காரம் மற்றும் ஒப்பனைக்கான செலவுகள் குறித்து கேட்டிருந்தார்.

இதையடுத்து, இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம், மாதம் வாரியான விரிவான செலவு விபரங்களை வழங்கியுள்ளது.

அதன்படி, 2019ம் ஆண்டு தொடக்கம் முதல், கடந்த ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தங்கள் பிரதமர்களுக்கான சிகையலங்காரம், ஒப்பனை மற்றும் தோற்றம் சார்ந்த செலவுகளுக்காக 4.49 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.

மொத்த செலவுகளில் 90 சதவீதம், அதாவது, 4.04 கோடி ரூபாய் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா ஆகியோருக்கே செலவிடப்பட்டு உள்ளது.

Source link