* EPFO-வின் கருத்துப்படி, EPF என்பது ஓய்வுக்காலத்திற்கான பாதுகாப்பான சேமிப்புத் திட்டமாகும். அரசு அறிவிக்கும் வட்டியுடன் சமூகப் பாதுகாப்பு, ஓய்வூதியம், காப்பீடு போன்ற கூடுதல் பலன்களும் இதில் கிடைக்கின்றன.
ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் நீண்டகாலத்தில் அதிக வருமானம் தரும் வாய்ப்பு இருந்தாலும், அது சந்தை அபாயத்துக்கு உட்பட்டது. எனவே, அதிக லாப வாய்ப்புடன் அதிக ரிஸ்கும் இருப்பதை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். சந்தை விதிகளின்படி முதலீட்டு லாபத்திற்கு மூலதன ஆதாய வரியும் பொருந்தக்கூடும்.
ஒரு முதலீட்டாளர் தனது முதலீட்டுப் பிரிவை பல்வகைப்படுத்த பரஸ்பர நிதிகளைத் தேர்வு செய்யலாமே தவிர, EPF சேமிப்பை முன்கூட்டியே எடுத்து சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வது அவரது நீண்டகால ஓய்வூதியப் பாதுகாப்பைப் பலவீனப்படுத்தும் என்பதை EPFO தெளிவுபடுத்தியுள்ளது.
எனவே, சந்தை அபாயங்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள் பரஸ்பர நிதிகளை கூடுதல் முதலீடாகப் பயன்படுத்தலாமே தவிர, ஓய்வூதியத் திட்டமிடலின் முதன்மை அடித்தளமாக EPF சேமிப்பையே வைத்திருக்க வேண்டும் என்று EPFO அறிவுறுத்தியுள்ளது.
