டெஹ்ரான்: ஈரான் உச்சத்தலைவர் மோஜ்தபா கமேனி நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக சவூதி அரேபியா ஊடகம் தெரிவித்துள்ளது.
ஈரான், அமெரிக்கா போர் இன்னமும் ஓயவில்லை. இரு தரப்பிலும் போர் மேலும் தீவிரம் அடைந்துள்ளது, உலக நாடுகள் மத்தியில் பெரும் கவலையையும்,பிராந்திய ரீதியான அமைதியின்மையையும் ஏற்படுத்தி உள்ளது.
ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்ட பின்னர், அப்பொறுப்பை அவரின் மகன் மோஜ்தபா கமேனி ஏற்றுக் கொண்டார். தந்தையின் இறுதிச்சடங்கில் மோஜ்தபா கமேனி பங்கேற்காத சூழலில், ஜூலை 23ம் தேதி தந்தை கமேனி நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந் நிலையில், மோஜ்தபா கமேனி ஈரானைவிட்டு வெளியேறி விட்டதாக சவூதி அரேபியாவின் அல் ஹதாத் ஊடகம் செய்தியை வெளியிட்டு உள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புத்துறையிடம் கிடைக்க பெற்ற தகவல்கள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. மோஜ்தபா கமேனி பெயரில் வெளியாகும் எந்த அறிக்கையும், அறிவிப்பும் அவர் எழுதியது கிடையாது என்றும் கூறி இருக்கிறது.
அதே நேரத்தில் அமெரிக்காவுடனான போர் முடிவுக்கு வரும் முன்பாக கமேனி எக்காரணம் கொண்டும் பொதுவெளியில் தோன்றமாட்டார். பாதுகாப்பு காரணங்களுக்காகவும், போர் சூழல் சீரடையும் வரை அவர் காத்திருப்பார் என்று டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
