ஈரான் தாக்குதலில் 100 ராணுவ வீரர்கள் காயம்; ஒப்புக் கொண்டது அமெரிக்கா

வாஷிங்டன்: ஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 100 பேர் காயம் அடைந்துள்ளனர் என்பதை அமெரிக்கா ஒப்புக் கொண்டு இருக்கிறது.

ஈரான் மீது அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 10வது நாளாக நீடித்து வரும் இத்தாக்குதலில் அமெரிக்கா தொடர்ந்து குண்டுகளை வீசி வருகிறது.

அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி தரும் வகையில், குவைத், ஜோர்டான், பஹ்ரைன் மீது தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் தங்களின் 100 வீரர்கள் காயம் அடைந்து உள்ளனர் என்று அமெரிக்கா ஒப்புக் கொண்டு இருக்கிறது. இதை பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல் ஒப்புக் கொண்டு உள்ளார்.

அவர் மேலும் கூறி இருப்பதாவது;

ஜூலை 7ம் தேதிக்கு பின்னர் நடந்த தாக்குதல்களில் இவர்கள் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட 96 சதவீதம் பேர் குணம் பெற்று, மீண்டும் பணிக்கு திரும்பிவிட்டனர்.

வீரர்கள் காயம் அடைந்துள்ள விவரத்தை வெளியிடுவதில் வேண்டுமென்றே தாமதத்தை ஏற்படுத்தினோம். வீரர்களின் நலன் கருதி இந்த தாமதம் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல் கூறினார்.

அதே நேரத்தில், அமெரிக்காவின் தாக்குதல்களினால் ஏற்பட்ட மொத்த ராணுவம் மற்றும் உள்கட்டமைப்பு சேதங்கள் குறித்து ஈரான் எந்தவொரு அதிகாரப்பூர்வ விவரங்களையும் வெளியிடவில்லை.

முன்னதாக பிப்.28ம் தேதி தொடங்கிய ஈரான் போரில் இதுவரை 17 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர், 430க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

Source link