”ஈரான் மீது மீண்டும் தாக்@தல்”; ரகசிய அலர்ட் கொடுத்த அமெரிக்கா

நவம்பர் 3 அன்று, அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலின் முடிவுகள் நாடாளுமன்றத்தில் பொருளாதார மற்றும் பாதுகாப்பு குறித்த விவகாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், ஆளும் (குடியரசு) கட்சியும்,  (ஜனநாயக) எதிர்க்கட்சியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்த தேர்தல் பிரச்சாரங்களில் அதிபர் ட்ரம்ப், தனது குடியரசு கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த பிரச்சாரங்களில் பல்வேறு விதமான அறிவிப்புகளையும், அரசின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் தெரிவித்து வருகிறார். அந்த வகையில், இந்த இடைக்கால தேர்தல் முடிந்தவுடன், ஈரான் மீது போர் நடத்த வாய்ப்பிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.  

இந்நிலையில்,  அமெரிக்காவில் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு ஈரான் மீது சில நாட்களுக்கு நீடிக்கக்கூடிய ’குறுகிய கால மற்றும் மிகத் தீவிரமான’ தாக்குதலைத் தொடங்க அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாகப் பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.  

ஒருவேளை இந்த தாக்குதல் நடத்தப்பட்டால், பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் அல்லது தங்களின் சொந்த உட்கட்டமைப்புகள் மீது ஈரான் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்பதால், அதற்குத் தயாராக இருக்குமாறு பல அரபு நாடுகளுக்கு அமெரிக்கா ரகசிய எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.  

எனினும், சிலர் இந்த தாக்குதல் சம்பவம் நடப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று கூறுகின்றனர். மேலும், சிலர் ‘ஒருவேளை இது தேர்தலுக்கான வியூகமாகக் கூட இருக்கலாம்’ என்றும் விமர்சித்து வருகின்றனர்.