உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் எதிரொலி; வீடுகளுக்குள் நுழையமுடியாமல் தவிக்கும் ரஷ்யர்கள்

மாஸ்கோ உக்ரைனின் அதிநவீன ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களால், வீடுகளுக்குள் நுழைய முடியாமலும், வங்கிக் கணக்குகளை பயன்படுத்த முடியாமலும் ரஷ்யர்கள் தவிக்கின்றனர்.

உக்ரைன்- ரஷ்யா இடையே, நான்கரை ஆண்டுகளைக் கடந்தும் போர் நீடிக்கிறது. சமீப காலமாக இரு தரப்பிடையேயான பரஸ்பர தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. சமீபத்தில் உக்ரைன் நடத்திய அதிநவீன தொழில்நுட்ப தாக்குதலால், ரஷ்யா நிலைகுலைந்து போயுள்ளது.

முக்கிய டிஜிட்டல் கட்டமைப்புகளை, குறிப்பாக ரஷ்யாவின் ‘கூகுள்’ என அழைக்கப்படும் ‘யான்டெக்ஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான தரவு மையங்கள் மீது உக்ரைன் அதிநவீன ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், ரஷ்யாவின் பல்வேறு நகரங்களில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பு வளாகங்களில் டிஜிட்டல் கதவு திறக்கும் அமைப்புகள் முடங்கியதால், ரஷ்யர்கள் பலரால் தங்கள் வீடுகளுக்குள்ளேயே நுழைய முடியவில்லை. முக்கிய டிஜிட்டல் வங்கி சேவைகள், பண பரிமாற்ற தளங்கள் மற்றும் நிதி சேவைகள் செயலிழப்பை சந்தித்தன. வங்கி கணக்குகள் சார்ந்த எவ்வித பணியையும் செய்ய முடியாமல் பயனாளிகள் தவித்தனர்

டாக்சி முன்பதிவு, உணவு மற்றும் மளிகைப் பொருள் விநியோகம் உள்ளிட்டவை முற்றிலும் முடங்கின. அனைத்து தொழில் நுட்ப சேவைகளும் யான்டெக்ஸ் அல்லது ஸ்மர்பேங்க் போன்ற ஒரு சில பெரிய நிறுவனங்களுக்கு சொந்தமான மையங்களால் மட்டுமே நிர்வகிக்கப்படுகின்றன.

இதன் காரணமாகவே, ரஷ்யாவில் இத்தகைய கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும், ரஷ்யாவின் டிஜிட்டல் கட்டமைப்புகள் பலவீனமாக உள்ளதும் இதன் வாயிலாக வெளிப்பட்டுள்ளது.

Source link